User Status

Du bist nicht angemeldet.

Aktuelle Beiträge

ஆன்மாவைத் தெரியுமா?
இந்து மதம் ஆன்மாவைத் தெரியுமா? ஆன்மாக்கள் நித்தியமாய்,...
uma_mano - 28. Dez, 15:25
இந்து மதம்
இந்து மதம் சொல்கிறது... இந்து மதம் சொல்லும் கீழ்காணும்...
uma_mano - 28. Dez, 15:11
சிவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. (சிவபெருமான்...
uma_mano - 28. Dez, 14:38
கீதா சாரம்
uma_mano - 28. Dez, 14:33
ஆன்மீகம்
( டிசம்பர் 28, 2010: இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில்...
uma_mano - 28. Dez, 14:32

பக்தி கீதங்கள்

Dienstag, 28. Dezember 2010

ஆன்மாவைத் தெரியுமா?

இந்து மதம்

ஆன்மாவைத் தெரியுமா?

ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தன்மையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும், சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.

ஆன்மாக்கள் நல்வினை, தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந்துழலும்.

நால்வகைத் தோற்றங்கள்:

அண்டசம், சுவேதசம், உற்பிச்சம்,சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் வியர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சுராயுசம் கருப்பையிற் தோன்றுவன.

எழுவகைப் பிறப்புகள்:

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வியர்வையிலே கிருமி, பேன் முதலிய சில ஊர்வனவும் விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர், கொம்பு, கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனி பேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனி பேதம், நாற்கால் விலங்குகள் பத்து நூறாயிரயோனி பேதம், பறவை பத்து நூறாயிரயோனி பேதம், நீர்வாழ்வன பத்து நூறாயிரயோனி பேதம், ஊர்வன பதினைந்து நூறாயிரயோனி பேதம், தாவரம் பத்தொன்பது நூறாயிரயோனி பேதம் ஆக எண்பத்து நான்கு நூறாயிரயோனி பேதம்.

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், காது எனும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என ஆறு வகைப்படும். புல்லும்,மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். சிப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள். கரையானும், எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தகத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும், வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும், பறவையும் அந்நான்கினோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும், மனிதர்களும் அவ்வைந்தினோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அனுபவிக்கும். அப்படி அனுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இருவினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து அவைகளின் பயன்களாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும். இப்படியே,தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும், காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படி பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகள் எல்லாவற்றிலும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது. உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சில காலம் வாழ்ந்து அழியினும் அழியும். மூன்று வயதுக்கு மேல் பதினாறு வயது வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயது வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மைதான். அழியுங்காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்தச் சரீரம், உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

நன்றி: பாலபாடம்-நான்காம் புத்தகம்.
முத்துக் கமலம்

இந்து மதம்

இந்து மதம் சொல்கிறது...

இந்து மதம் சொல்லும் கீழ்காணும் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

வேதம்-4

1. இருக்கு 2. சாமம் 3. யசுர் 4. அதர்வம்

வேதாங்கம்-6

1. சிக்ஷை 2. சந்தசு 3. சோதிடம் 4. வியாகரணம் 5. நிருத்தம் 6. கற்பம்

உபாங்கம்-4

1. மீமாஞ்சை 2. நியாயம் 3. புராணம் 4. ஸ்மிருதி

மீமாஞ்சை-2

1. பூருவமோமாஞ்சை 2. உத்தரமீமாஞ்சை

நியாயம்-2

1.கெளதம சூத்திரம் 2. காணத சூத்திரம்

புராணம்-18

1.பிரம புராணம் 2. பதும புராணம் 3. வைணவ புராணம் 4. சைவ புராணம் 5. பாகவத புராணம் 6. பவிடிய புராணம் 7. நாரதீய புராணம் 8. மார்க்கண்டேய புராணம் 9. ஆக்கினேய புராணம் 10. பிரமகைவர்த்த புராணம் 11. இலிங்க புராணம் 12. வராக புராணம் 13. காந்த புராணம் 14. வாமண புராணம் 15. கூர்ம புராணம் 16. மற்ச புராணம் 17. காருட புராணம் 18. பிரமாண்ட புராணம்

ஸ்மிருதி-18

1. மனு ஸ்மிருதி 2. பிரகஸ்பதி ஸ்மிருதி 3. தக்ஷ ஸ்மிருதி 4. யம ஸ்மிருதி 5. கெளதம ஸ்மிருதி 6. அங்கிர ஸ்மிருதி 7. யாஞ்ஞவ்ல்கிய ஸ்மிருதி 8. பிரசேத ஸ்மிருதி 9. சாதாதப ஸ்மிருதி 10.பராசர ஸ்மிருதி 11. சம்வர்த்த ஸ்மிருதி 12. உசன ஸ்மிருதி 13. சங்க ஸ்மிருதி 14. லிகித ஸ்மிருதி 15. அத்திரி ஸ்மிருதி 16. விஷ்ணு ஸ்மிருதி 17. ஆபத்தம்ப ஸ்மிருதி 18. ஹாரித ஸ்மிருதி

இதிகாசம்-3

1.சிவரகசியம் 2. இராமாயணம் 3. பாரதம்

சைவாகமம்-28

1. காமிகம் 2. யோகஜம் 3. சிந்தியம் 4. காரணம் 5. அசிதம் 6. தீப்தம் 7. சூக்குமம் 8. சகக்சிரம் 9. அஞ்சுமான் 10. சுப்பிரபேதம் 11. விசயம் 12. நிச்சுவாசம் 13. சுவாயம்புவம் 14. ஆக்னேயம் 15. வீரம் 16. ரெளரவம் 17. மகுடம் 18. விமலம் 19. சந்திரஞானம் 20. முகவிம்பம் 21. புரோற்கீதம் 22. லளிதம் 23. சித்தம் 24. சந்தானம் 25. சர்வோக்தம் 26. பாரமேசுவரம் 27. கிரணம் 28. வாதுளம்

வைஷ்ணவாகமம்-2

1.பாஞ்சராத்திரம் 2. வைகானசம்

மேலுலகம்-7

1. பூலோகம் 2. புவர்லோகம் 3. சுவர்லோகம் 4. மகர்லோகம் 5. சனலோகம் 6. தபோலோகம் 7. சத்தியலோகம்

கீழுலகம்-7

1. அதலம் 2. விதலம் 3. சுதலம் 4. தலாதலம் 5. ரசாதலம் 6. மகாதலம் 7. பாதாளம்

தூவீபம்-7

1. ஜம்பூத்துவீபம் 2. பிலஷத்துவீபம் 3. சான்மலித்துவீபம் 4. குசத்துவீபம் 5. கிரெளஞ்சத்துவீபம் 6. சாகத்துவீபம் 7. புஷ்கரத்துவீபம்

சமுத்திரம்-7

1.லவண சமுத்திரம் ( லவணம்-உப்பு) 2. இக்ஷீ சமுத்திரம் ( இக்ஷூ-கருப்பஞ்சாறு) 3. சுரா சமுத்திரம் (சுரா-கள்ளு) 4. சர்ப்பி சமுத்திரம் (சர்ப்பி-நெய்) 5. ததி சமுத்திரம் (ததி- தயிர்) 6. க்ஷீர சமுத்திரம் (க்ஷீரம்-பால்) 7. சுத்தோதக சமுத்திரம் (சுத்தோதகம்-நல்ல நீர்)

வருஷம்-9

1. பாரத வருஷம் 2. கிம்புருஷ வருஷம் 3. ஹரி வருஷம் 4. இளாவிருத வருஷம் 5. இரமியக வருஷம் 6. இரண்மய வருஷம் 7. குரு வருஷம் 8. பத்திராசுவ வருஷம் 9. கேதுமாலவ வருஷம்

முத்தி நகரம்-7

1. அயோத்தி 2. மதுரை 3. மாயை (ஹரித்துவார்) 4. காசி 5. காஞ்சி 6. அவந்தி 7.துவாரகை.

பாடை நிலம்-18

1.திராவிடம் 2. சிங்களம் 3. சோனகம் 4. சாவகம் 5. சீனம் 6. துளுவம் 7. குடகம் 8. கொங்கணம் 9. கன்னடம் 10. கொல்லம் 11. தெலுங்கம் 12. கலிங்கம் 13. வங்கம் 14. கங்கம் 15. மகதம் 16.கடாரம் 17. கெளடம் 18. குசலம்.

நன்றி- பாலபாடம்-நான்காம் புத்தகம்
முத்துக் கமலம்

கீதா சாரம்

Geetha_Saram

ஆன்மீகம்

( டிசம்பர் 28, 2010: இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல் )

ஆன்மீகம்

குறுகிய நோக்கில் ஆன்மீகம் என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும். ஆன்மீக விடயங்கள், மனிதத்தின் அனைத்தும் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் குறிப்பன. இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஒரு உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகக் கருதுகின்றன. ஆன்மீகம் என்பது, உடல், ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் மனம்-உடல் இருமைத்தன்மையையும் உணர்த்துகிறது.

இதனால், ஆன்மீகம் என்பது, பொருள் சார்ந்த, உலகியல் விடயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது.
"http://ta.wikipedia.org/wikiஇருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு: ஆன்மீகம்

சைவசமயம்

இந்துமதம்

சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் இந்து மதமே உலகின் மிகவும் பழமையான மதமாகும். இச் சைவசமய மதம் எப்போது உருவானது? எப்படி உருவானது? எவருக்கும் இதுவரையில் தெரியாததாகும். ஆகவே இவ் இந்துமதத்தைப்பற்றிய சில விழக்கங்கள் இங்கே கூறப்பட்டுள்ளது.



விபூதியின் மகிமைகள்

சைவ சமய பெருமக்களிற்கு திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். திருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு.



சிவனின் அஸ்டமூர்த்திகள்

ஒருமுறை பிரம்மன் தனக்கு ஈடான வகையில் தனக்கு ஒரு மகன் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தார்.பிரம்மன் நினைத்தவுடன் அவர் துடையின் மேல் ஒரு குழந்தை தோன்றினான்.அக்குழந்தையின் கழுத்து நீலமாகவும் தலைமுடி சிகப்பாகவும் இருந்தது.அதனால் பிரம்மா அவனுக்கு நீலலோகிதன் என பெயரிட்டார்.



தைப்பொங்கல்

தைப்பொங்கல் திருநாள் என்பது ஒரு மத சம்பந்தமான திருநாள் அல்ல. மாறாக இது ஒரு தமிழர் திருநாளாகும். அதிலும் தமிழ் உழவர் திருநாள் என்று சொன்னால் மிகையாகாது. உலகம் முழுவதும் மே தினம் என்று தொழிலாளர் தினத்தின கொண்டாடுகின்றனர். இந்த பழக்கம் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களிற்கு முன்னரே உழவர் திருநாளாக அதாவது விவசாய பெருமக்களின் தொழிலாளர் தினமாக தைப் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர் நம் தமிழ் மக்கள்.



தைப்பூசத்திருநாளும் அதன் மகிமையும்.

பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன.



சரஸ்வதி பூஜை-சகலகலாவல்லிமாலை

சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி.சக்த்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி."இதிலிருந்து சக்தியின் வலிமையை நாம் அறியலாம்" நவராத்திரி புரட்டாதி மாதத்தில் கொண்டாடப்படும்.இதில் முதல் மூன்றுநாட்களும் வீரத்தைவேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும் இறுதி மூன்று நாட்களும் கல்வியைவேண்டி சரஸ்வதியையும் வழிபடுகின்றோம்.

விஜயதசமி அன்று சிறார்களுக்கு ஏடு தொடக்குதல் முக்கியவிடையமமகக் கருதப்படுகிறது. ஆலயங்களிலும், கல்விக்கூடங்களிலும் வாணி விழா வெகுவிமர்சயாக கொண்டாடப்படுகிறது. ஆலயங்களில் கன்னி வாழை வெட்டுதலும், மகிடடாசுரன்போரும் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக வீடுகளில் மக்கள் அவரவர் தொழிலுக்கு ஏற்ற ஆயுதங்களை வைத்துஆயுத பூஜை வழிபபடும் நடைபெறும். அவ்வழிபாட்டிற்கு பாடப்படும் சகலகலா வல்லிமாலை சரஸ்வதி அந்தாதி உள்ளே>>>



மங்கல விளக்கேற்றல்

மங்கல விளக்கேற்றல் என்பது,மங்கலம்,விளக்கு,ஏற்றல் என்னும் சொற்களாலாய தொடர்மொழி.அவற்றுள் மங்கலம் என்பது நன்மை,நலம்,காரியசித்தி,பொலிவு,அறம் என பல பொருட்களை பயக்கும்.ஆகவே மங்கலத்தை தரும் விளக்கை ஏற்றி வணங்குதல் என்பது அதன் பொருளாகும்.



நவராத்திரி கொலு

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.



சங்காபிஷேக தத்துவம்:

கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படும். அவரவர் வசதிப் படி 108, 1008 என்ற ரீதியில் சங்குகளில் அபிஷேகப் பொருள்களை நிரப்புவர். சிவன் அபிஷேகப்பிரியர். இவரது தலையில் கங்காதேவி நிரந்தரமாகக் குடியிருந்து குளிர்விக்கிறாள்.



செவ்வாய் தோசம் என்றால் என்ன?

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்படவோண்டிய விடயம் செவ்வாய் தோசமாகும்.ஜாதகங்களில் லக்கினத்திலிருந்து 2,4,7,8,12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும்.இதை சந்திர லக்னம் (ராசி),சுக்ரன் இருக்கும் இடங்களிலிருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிடங்கள் கூறுகின்றன.மூன்று முறையிலும் தோசமிருப்பின் மிக கடுமையான தோசம் என கூறும் ஙhல்களும் உண்டு.இருப்பினும் லக்கினத்திலிருந்து கணிப்பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது.இதிலும் 7,8 மிக கடுமையான தோசம், 4 கடுமையான தோசம், 12 தோசம் ,2 குறைவான தோசம் எனவும் சிலர் வரையறக்கின்றனர்.

z_p15-Philosophy-in1

Montag, 27. Dezember 2010

நல்லூர் ஆலயம்

kovil

சிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(சிவபெருமான் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவன்

திராவிடர்களின் கடவுளெனவும், சைவர்களின் தலைவனாகவும் வழிபடக்கூடிய கடவுள் வடிவமே சிவன்.

சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை வழிபட்டோர்கள் உமா தேவி, உருத்திரன், திருமால், பிரம்மன், பிள்ளையார், முருகன், தேவர் முதல் இராவணன் வரை. எல்லோரும் அவன் அடிமை. சிவன் உருவாய் (நடராசன்), அருவுருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்குக் காட்சி அளிக்கிறார். சிவனுக்குப் பிறப்பு இறப்பு இல்லை. இருவினையும் இல்லை,

அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றா னமருங்கோயில்- சம்பந்தர்
பொருளடக்கம்
[மறை]

* 1 சிவனின் ஜந்து முகங்கள்
* 2 சிவனின் தோற்றம்
* 3 திராவிக் கடவுள்
* 4 சிவனது தனித்துவ அடையாளங்கள்
* 5 சிவனது உருவத்திருமேனி
o 5.1 நடராஜர்
o 5.2 தட்சணாமூர்த்தி
o 5.3 அர்த்த நாரீசுவரர்
o 5.4 இலிங்கம்
o 5.5 இலிங்கோற்பவர்
* 6 புகழ் பெற்ற சிவத்தலங்கள்
o 6.1 சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்
o 6.2 பஞ்சபூத சிவத்தலங்கள்
o 6.3 ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்
o 6.4 ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்
o 6.5 சத்த விடங்க சிவத்தலங்கள்
o 6.6 முக்தி தரவல்ல சிவத்தலங்கள்
o 6.7 தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்)
* 7 வெளி இணைப்புகள்

[தொகு] சிவனின் ஜந்து முகங்கள்

* சத்யோ ஜாதம்
* வாமதேவம்
* அகோரம்
* தற்புருடம்
* ஈசானம் - இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

[தொகு] சிவனின் தோற்றம்

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.
[தொகு] திராவிக் கடவுள்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது. சிவனை வழிபடும் இடங்களிலெல்லாம் திராவிடர்களின் பதிவுகள் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்திலும் நம்முடைய மூத்தோர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று செந்தமிழ் செம்மொழி மாநாட்டில் கூறினார்.
[தொகு] சிவனது தனித்துவ அடையாளங்கள்

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றன.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றித் தேவாரப் பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

* நெற்றிக்கண் காணப்படல்.
* கழுத்து நிலநிறமாக காணப்படல்.
* சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
* நீண்ட சுருண்ட சடாமுடி
* தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
* உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
* புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல்.
* கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
* கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
* நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.

[தொகு] சிவனது உருவத்திருமேனி

முதன்மைக் கட்டுரை: சிவனின் திருமேனிகள்

[தொகு] நடராஜர்
வெண்கலதால் அமைந்த சோழர்கால நடராசர் சிலை

சிவனது உருவதிருமேனிகளில் நடராஜர் வடிவம் மிகப் பிரபலமானது சிவனை ஆடலரசனாகக் கொள்ளும் வடிவாகும்.
[தொகு] தட்சணாமூர்த்தி

ஆலமரத்தின் கீழ் தெற்குதிசையினைப் பார்த்தவாறு முனிவர்களுக்கு யோகத்தினை விளக்கும் வகையில் அமர்ந்திருக்கும் வடிவமாகும்.
[தொகு] அர்த்த நாரீசுவரர்

சிவனின் ஆண் உருவத்தில் பாதியும்,பார்வதியின் பெண்ணுருவத்தில் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைந்த வடிவாகும்.
[தொகு] இலிங்கம்

சிவனது அரு உருவத்திருமேனிவடிவாகும்.
[தொகு] இலிங்கோற்பவர்

சிவனது உருவத்திருமேனிகளில் ஒன்றாகும்.கருவறையின் பின் புறமாக மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இறைவனது பாதமும் முடியும் கண்ணிற்குப் புலப்படாத வகையில் இவ் வடிவம் அமைந்திருக்கும்.
[தொகு] புகழ் பெற்ற சிவத்தலங்கள்

சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும். சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு.
[தொகு] சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்

இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரெண்டு சோதி இலிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை (தமிழ்நாடு) அருணாச்சலமே மூல சிவதலம்.

1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)

2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)

4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)

5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம்)

6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)

7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)

9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)

10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)

11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)

12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்)
[தொகு] பஞ்சபூத சிவத்தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

1.மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர்.

2.நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா திருச்சிராப்பள்ளி

3.தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை

4.வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி

5.வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்
[தொகு] ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இவைதான்.

1.தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.

2.திருவாரூர்-அசபா தாண்டவம்.

3.மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.

4.அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.

5.திருமுருகன் பூண்டி-பிரம தாண்டவம்.
[தொகு] ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள்(அடைப்புக் குறிக்குள் சபைகள்)

1.தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).

2.திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).

3.மதுரை-வெள்ளி மன்றம் (இராஜ சபை).

4.திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).

5.திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).
[தொகு] சத்த விடங்க சிவத்தலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.

1.திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்).

2.திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).

3.திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).

4.திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).

5.திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).

6.திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).

7.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)
[தொகு] முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

1.திருவாரூர்-பிறக்க முக்தி தருவது

2.சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது

3.திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது

4.காசி-இறக்க முக்தி தருவது
[தொகு] தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்)

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:

1.பாபநாசம்

2.சேரன் மகாதேவி

3.கோடகநல்லூர்

4.குன்னத்தூர்

5.முறப்பநாடு

6.திருவைகுண்டம்

7.தென் திருப்பேரை

8.ராசபதி

9.சேர்ந்த பூ மங்கலம்
[தொகு] வெளி இணைப்புகள்

* முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "ஜோதிர்லிங்கக் கோயில்கள்" கட்டுரை.
* சைவ நெறி வலைப்பூ

"http://ta.wikipedia.org/wiki இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்: சைவ சமயம் | இந்துக் கடவுள்கள்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

Samstag, 6. Februar 2010

வணக்கம்

sivan-family
சைவசமயம்

ஆன்மீகம்

எமது சமயம்

Suche

 

Status

Online seit 5214 Tagen
Zuletzt aktualisiert: 28. Dez, 15:25

Credits


Profil
Abmelden
Weblog abonnieren